News readers,socialist, story readers ,the selfrespect persons ,socialist leaders , communism
திங்கள், 14 டிசம்பர், 2020
பெரியாரும் செருப்பு தைக்கும் கவிஞரும் :-
பெரியாரும் செருப்பு தைப்பவரும் :
ஒரு நாள் பெரியார் மாநாடுக்கு செல்லும்போது அவரது செருப்பு பிச்சுவிட்டது ,பெரியார் செருப்பை ஒரு பெரியார் தொண்டர் தைத்துவிட்டு வர சென்றார் ,அப்போது அருகே ஒரு கலியபெருமாள் என்ற செருப்பு தைப்பவர் இருந்தார் அவரிடம் பெரியார் தொண்டர் செருப்பை கொடுத்தார் இந்த செருப்பை தைத்து தாருங்கள் என்றார் ,கலியபெருமாள் அவரை பார்த்து நீங்கள் கருப்பு சட்டை அனிந்திருகிரீர்களே நீங்கள் பெரியார் தொண்டரா ? என்று கேட்டார், அதற்கு அவர் ஆம் நான் பெரியார் மாநாட்டிலிருந்து தான் வந்திருக்கிறேன் என்றார் , கலியபெருமாள் ஒரு கவிதையை பெரியாரின்டம் சொல்லவேண்டும் என்று ஆசைபட்டார், பெரியார் தொண்டர் அதை ஒரு காகிதத்தில் எழதிதாருங்கள் நான் அய்யாவிடம் அதனை கான்பிக்கிறேன் என்றார், கலியபெருமாள் எனக்கு எழுத படிக்க தெரியாது என்று சொன்னார். உடனே பெரியார் தொண்டர் இதை பெரியாரிடம் சொன்னார், உடனே பெரியார் கலியபெருமாளை அழைத்து வரும்படி தொண்டருக்கு சொன்னார், கலியபெருமாள் வந்தார் மேடையில் கலியபெருமாளின் கவிதை வாசித்தபிறகுதான் நமது உறை தொடங்குவோம் என்று பெரியார் அறிவித்தார்...அதற்கு அவர் அய்யா எனக்கு படிக்க தெரியாது என்றார் ,பரவா இல்லை இது உங்களுடைய கவிதைதானே பேப்பரை வைத்துகொண்டு கவிதையை வாசியுங்கள் என்றார் ,மாநாடு தொடங்கியது கலியபெருமாள் மேடையில் தனது கவிதையை சொன்னார்.,மக்கள் பாராட்டு பெற்றார், பெரியாரின் அடுத்த மாநாடுகளில் கலியபெருமாள் கவிதை வாசித்தபிறகுதான் தனது பேச்சை தொடங்குவார் போஸ்டர் விளம்பரங்களில் கலியபெருமாளின் கவிதை வாசிப்பும் இருக்கும் என்றுதான் மாநாடு விளம்பரம் செய்வார்...உடனே இதை விரும்பாத பார்பனர்கள் ஒரு படிக்காத பட்டம் பெறாத ஒருவரை நீங்கள் எப்படி கவிஞர் என்று சொல்லாம் இனி அவரது கவிதை வாசிக்க கூடாது என்று நீதி மன்றத்தில் பெரியார் மீது வழக்கு போடப்பட்டது., அதற்கு பெரியார் எந்த வழக்கறிஞர்களும் இல்லாமள் அவரே வழக்கை சந்தித்தார் ,பெரியார் கோர்ட்டில் இவ்வாறு கூறினார், கவிதை சொல்வதற்கு கல்வி தகுதி வேண்டும் என்றால் ,கம்பர் வால்மீகி எல்லாரும் எந்த பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்கள் சொல்லுங்கள் என்றார் ,அங்கே யாருஇடத்திலும் பதில் இல்லை, நீதிபதி வழக்கை நிராகரித்துவிட்டார் பெரியாருக்கு எந்த தண்டனையும் பெறாமல் வெளியே வந்தார் ....
அன்று முதல் இன்று வரை பெரியார் என்றாலே பார்ப்பனர்களை பதற வைத்தவர்தான் பெரியார்...
எத்தனை நூற்றாண்டு ஆனாலும் அடக்குமுறை என்றால் அங்கே பெரியார் நினைவு கூறபடுகிறார்....
Sent from my Samsung Galaxy smartphone.
ஞாயிறு, 13 டிசம்பர், 2020
புதிய வேளாண்மை சட்டத்தை ஏன் இவ்வளவு எதிர்ப்பு?அதற்கான காரணம்?( Puthiya velan sattathai ethirka karanam)
ஏன், மோடி அரசின் 'புதிய வேளாண் சட்டங்கள் 2020'ஐ எதிர்த்து விவசாயிகளின் இந்த வரலாறு காணாத யுத்தம்?
எதற்காக, 'உப்புப் போட்டு சோறு தின்னும்' ஒட்டுமொத்த தேசப் பற்றாளர்களின் இந்த எழுச்சிகரமான (டிசம்பர் 8) *பாரத்_பந்த்?*...
*
அந்த சட்டங்கள் யாருக்கானது என்பது மிகச் சுருக்கமாக...
1. *உற்பத்தி சார்ந்த சட்டம்*
உற்பத்தி செய்யும் விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சாவுமணி...
*நோக்கம்* : விவசாயிகள் தாங்கள் விளைய வைத்த பொருட்களை அடிமாட்டு விலைக்கு விற்கக்கூட கார்ப்பரேட்காரனை அண்டிப் பிழைக்கும் நிலையை ஏற்படுத்துவது!
2. *கொள்முதல் சார்ந்த சட்டம்*
அரசே கொள்முதல் செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வாய்க்கரிசி...
*நோக்கம்* : அம்பானிகளும் அதானிகளும் நிர்மானிக்கும் அதிநவீன கொள்முதல் கூடங்களில் விவசாயிகளை ஒப்பந்தம் போடவைத்து கார்ப்ரேட்காரனின் நவீன பண்ணையடிமைகளாக அவர்களை மாற்றுவது!
3. *விநியோகம் சார்ந்த சட்டம்*
அத்தியாவசியப் பொருட்கள் (29) பாதுகாப்புச் சட்டத்திற்கு சங்கு...
#நோக்கம் : சட்டவிரோத பதுக்கல் பேர்வழிகள் இனி சட்டபூர்வமாக பொதுமக்களின் வயிற்றில் அடிப்பது!
ஆக, இது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனை.
எனவே, இந்த அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்...
நாளை இந்தியாவின் இயக்கத்தை நிறுத்துவோம்!
#FarmersProtest #ModiAgainstFarmers
#BharatBandh
வியாழன், 10 டிசம்பர், 2020
புதிய வேளாண் சட்டம் என்றால் என்ன?யாருக்கானது ?
நமது விவசாயிகள் மட்டுமின்றி,
உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள்.
1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..??
2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..?
3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும்.
4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..??
5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..??
6️⃣ PDS system என்னாவது ..??
7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..??
8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..??
9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில் ஒரு சட்டமா அல்லது திட்டமிட்ட சதியா ..??
மேலும் பல கேள்விகள் எழுகின்றன..
சிலர் ஆதாயத்திற்காகவோ அல்லது ஒரு சார்பு நிலை எடுத்துவிட்டதாலோ உழவர்களை கிண்டலடிக்கலாம்..
ஒரு அரசு கடும் குளிரில் அமர்ந்து போராடும் லட்சக்கணக்கணக்கான உழவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஐந்து நாட்கள் குளிரில் அவதிப்படுங்கள், நாங்கள் எங்களுக்குள் வசதியாக அமர்ந்து பேசி மீண்டும் உங்களுடன் பேசுவோம் என்பது எந்த விதத்தில் நியாயம் என்பதனையும் எண்ணிப் பார்க்கவேண்டும்..
இந்த வலிகள் ஏதோ ஒரு சந்தர்பவசமாக பல மாநிலங்களில் ஆட்சியில் அமர்பவர்களுக்கோ புரியாது..
புரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள்..
ஆனால், உழவுக் குடும்பத்தில்
பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் இதன் பெரும் கேடு தெளிவாகப் புரியும்..
உழவரைப் போற்றுவோம்..
உழவர்களின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்
செவ்வாய், 8 டிசம்பர், 2020
தேவதாசி ஒழிப்பு முறை டாக்டர் முத்துலட்சுமி
#தேவதாசி!
௦
20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை தேவதாசிகள் இல்லாத கோவில் களே தென்னிந்தியாவில் இல்லை.
*
இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவரடியார்கள் இருந்ததாக தெரிய வருகின்றது.
௦
தேவரடியார்கள் வேறு,தேவதாசிகள் வேறு என்ற கருத்தை,தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர்.
°
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களைத் தவிர,விரும்பும் பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை, கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
௦
இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களைப் பற்றிய இந்த வரலாறு தெரியாது.
°
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்புப் பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி, இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.
௦
சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த இராகவய் யர், ஷேசகிரி அய்யர், மு.வ.இராம நாத அய்யர் எனும் பார்ப்பன அணி யினர் இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
௦
இதற்குப் பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து, நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர,
௦
சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி,தேவதாசிப் பெண்களை வைத்தே, இந்த தீர்மானத்தை எதிர்த்துப் போராட வைத்தனர்.
௦
இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள்.
௦
இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் !என்ன செய்வது" என்று எம்.எல்.ஏ முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.
௦
அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி, நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
௦
பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு, அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
௦
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால், அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் !
௦
அவர்கள் தங்களை அர்ப்பணித்து, தொண்டு செய்வதால்,புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகி றார்கள்.'' என்றார்
௦
அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து,"தேவதாசி ஒழிப்புத் தீர்மானத்திற்கு ,எதிராகப் பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.
௦
இதுவரையில்,எங்க ஜாதியிலேயே, (இசை வேளாளர்)கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தையும் சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல், அந்தத் தொண்டை உங்கள் பிராமணப் பெண்களே செய்யட்டும்...!
௦
நீங்களும் புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்புக் கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது!" என்றார்.
௦
இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில் கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணியில் முக்கி அடித்தது போல் இருந்தது.
௦
இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான், தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
௦
#பெரியார்_என்றாலே, ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று, இப்பொழுதாவது புரிகிறதா..?
௦
ஞாயிறு, 6 டிசம்பர், 2020
பெரியாரும் அவரின் சுயமரியாதையும்
*தமிழர்களின் தனிப்பெரும் தாய்நாடான நமது தமிழ்நாட்டின் தேசத் தந்தை - அறிவுலக ஆசான் அய்யா பெரியார், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரைக்குடிக்கு வந்திருந்தார். அப்போது, காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தான் எனும் ஊரில், அப் பகுதியில் அதிகார - ஆதிக்கச் சக்தியாக விளங்கும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனப்படும் நகரத்தார் குடும்பத்து திருமணம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்டக் குடும்பத்தினர் செய்துக் கொண்டிருந்தனர்.*
*அப்போது திருமண நிகழ்ச்சிகளுக்காக அழைத்து வரப்பட்டிருந்த, நாதஸ்வரக் குழுவினர், தங்களது இசையைத் தொடங்கினார்கள். அப்போது, திருமண வீட்டாரைச் சேர்ந்த ஒருவர், நாதஸ்வரத்தை வாசிப்பவரிடம், " இந்தப் பகுதி, இங்கே பிரபலமான நகரத்தார் சமூகத்தின் செல்வாக்குப் பெற்றப் பகுதி. அதோடு மட்டுமல்லாமல், இந்தத் திருமணமும், நகரத்தார் வீட்டுத் திருமணம் ஆகும். மேலும், இந்தப் பகுதிகளில் நடக்கும் திருமணங்களில் நாதஸ்வரத்தை வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருமே, நாதஸ்வரத்தை வாசிக்கும்போது, தங்களின் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு வாசிப்பதுதான் காலங்காலமாய் இந்தப் பகுதியில் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நடைமுறை ஆகும். அதனால்......*: *அதனால், நீங்களும், உங்கள் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு, நாதஸ்வரத்தை வாசியுங்கள்" என்றார். அதற்கு நாதஸ்வரம் வாசிப்பவர் "இது என்னுடையத் தொழில். நாதஸ்வரத்தை வாசிக்கும்போது துண்டை தோளில் போட்டுக் கொண்டு வாசிப்பதுதான் இந்தத் தொழிலுக்கே உரியத் தனிச் சிறப்பு. - மரியாதை ஆகும். அதனால், துண்டை தோளில் போட்டுக் கொண்டுதான் வாசிப்பேன்" என்றார், நாதஸ்வரம் வாசிப்பவர். இந்தப் பிரச்சினை, தந்தைப் பெரியாரோடு, உடன் தங்கியிருந்த, அன்றையக் காலக்கட்டங்களில் தன்மானத்தோடு வாழ்ந்த உண்மையான சுயமரியாதைக்காரர்களில் ஒருவரான, பட்டுக்கோட்டை அழகிரியின் வழியாக தந்தைப் பெரியாரின் கவனத்துக்குக் கொண்டுப் போகப்பட்டது..... தமிழனின் சுயமரியாதைக்கு ஒரு பங்கம் - பாதிப்பு என்றால், தனக்கே உரியப் போர்க்குணத்தோடு பொங்கியெழும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.... "எக்கேடுக் கெட்டாலும் சரிதான்.... என்ன ஆனால
பெரியாரின் புத்தகங்கள் Bdf
பெரியார் புத்தகங்களின் PDF இணைப்புகள். விருப்பமுள்ளவர்
பயன்படுத்தி கொண்டு வாசியுங்கள்..!
சமஸ்கிருத சனியன் --> https://t.co/dyGfKuZqgu
அழியட்டும் "ஆண்மை" --> https://t.co/fj6jVn3xSr
அழிவு வேலைக்காரன் --> https://t.co/IZRUKhIqlz
ஆத்மா, மோட்சம் - நரகம் --> https://t.co/Br5wekWIDK
இந்து மதப் பண்டிகைகள் --> https://t.co/NEPjfFGAJ1
இயற்கையும், மாறுதலும் --> https://t.co/nQNvUe7Wxa
இராமாயணக் குறிப்புகள் --> https://t.co/E80M8Jdz5c
இனிவரும் உலகம் --> https://t.co/oU3sd2Z1ve
உயர் எண்ணங்கள் --> https://t.co/v6v3KM7Skf
கிராமங்கள் ஒழிய வேண்டும் --> https://t.co/CNLNb1Vs73
சித்திரபுத்திரன் விவாதங்கள் --> https://t.co/X3MQhCXoSl
சிந்தனையும் பகுத்தறிவும் --> https://t.co/tMW1dZMT66
சுதந்திரத் தமிழ்நாடே எனது லட்சியம் -- > https://t.co/9FKHtLKPm2
இலங்கைப் பேருரை --> https://t.co/35hpoCMNVH
தமிழர்கள் இந்துக்களா ? --> https://t.co/0T5qjmf5i9
தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம்: பெரியாரும் ம.பொ.சி.யும் --> https://t.co/6nWkECgOg6
திராவிடர் - ஆரியர் உண்மை --> https://t.co/nZbtORQ4pP
திராவிடர் திருமணம் --> https://t.co/YVPg4lN0mK
தேவதாசி ஒழிப்புச் சட்டம் --> https://t.co/QNVbYtkHVB
பறையன் பட்டம் போகாமல் --> https://t.co/fIlHco54bf
பிள்ளையாரை உடைப்போம் ! --> https://t.co/iA4AuSAI8E
புத்தர் விழா --> https://t.co/5KVyv0sNoD
புராணங்களை எரிக்க வேண்டும் --> https://t.co/Nq1CwTVfpq
பெண் விடுதலைச் சட்டங்களும் பார்ப்பனர்களும் --> https://t.co/kAoN6Tfu90
பெரியாரின் தன் வரலாறு --> https://t.co/IM41ziGt8x
பொதுத் தொண்டு --> https://t.co/2c2mwgusiB
பொதுவுடைமை சமதர்மம் --> https://t.co/QTHcAclXiV
மனு சாஸ்த்திரத்தை எரிக்க வேண்டும். ஏன் ? --> https://t.co/eS3tMRT8BN
மனு நீதி: ஜாதிக்கொரு நீதி --> https://t.co/4FGlG4NmBR
ரஷ்யாவின் வெற்றி --> https://t.co/g3wzO3lfdA
ஜனநாயகத்தின் முட்டாள்த்தனம் --> https://t.co/yiVFMNCycq
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பாம்புகள்: உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்...
-
காரல் மார்க்ஸ் சிந்தனைகள் : 1) ஒரு மனிதனை ஒரு மீன் பிடிக்கவும், அதை நீங்கள் அவனுக்கு விற்கலாம். ஒரு மனிதனை மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள், நீ...
-
செவ்வாய் கிரகம் முன்னுரை செவ்வாய் கிரகம். இது சூரியனில் இருந்து நான்காவது கிரகம். இது பூமியைத் தாண்டிய அடுத்த கிரகம். செவ்வாய் சூரியனில்...