திங்கள், 8 பிப்ரவரி, 2021

மின் விலாங்கு மீன்; the electric fish eel;

மின் விலாங்கு மீன்; (Electric eel) தென் அமெரிக்காவைச் சேர்ந்த மின்னாற்றல் மீனாகும். விலாங்கு என்று பெயர் இருப்பினும் இது விலாங்கு மீன் அல்ல; மாறாக இது ஒரு கத்திமீனாகும். மின் விலாங்கு மீன், எதிரிகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் பிற உயிர்களை வேட்டையாடுவாதற்காகவும், 500 வோல்ட்டு மின்னழுத்தம், 1 ஆம்பியர் மின்னோட்டம் (500 வாட்) திறனுள்ள மின் அதிர்வுகளை உற்பத்தி செய்யவல்லது. மின்னழுத்தம் உச்சமாக 650 வோல்ட்டு வரை செல்லக்கூடும். இம்மீன், தென் அமெரிக்க நீர்நிலைப் பகுதிகளில் காணப்படும் முக்கிய கொன்றுண்ணி ஆகும். இது அமேசான் மற்றும் ஓரினோகோ (Orinoco) ஆற்றுப் படுகைகளிலும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. 2.5 மீட்டர் நீளமும் 20 கிலோகிராம் எடையும் கொண்டதாக இவை வளர வல்லவை என்றாலும், 1 மீட்டர் நீளமுள்ள இவ்வகை மீன்களை பொதுவாக காணலாம்.... வாழ்விடம்; அமேசான் மற்றும் ஒரினோகோ ஆகிய நன்னீர் ஆற்றுப் படுகைகளில் மின் விலாங்கு மீன்கள் வாழ்கின்றன. மேலும் வெள்ளம், சதுப்பு நிலம், சிற்றோடைகள், சிற்றாறுகள் மற்றும் கடலோர சமவெளி ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் சேற்றின் அடிப்பகுதியில் உள்ள கலக்கமற்ற அல்லது தேங்கிய நீரில் வாழ்கின்றன. வறண்ட பருவத்தில் ஆண் மீன் தன் உமிழ்நீரைக் கொண்டு ஒரு கூடு கட்டும். அதில் பெண் மீன் முட்டையிடும். ஒரு கூட்டில் அதிகபட்சம் 3000 மீன் குஞ்சுகள் வரை பொரிகின்றன. பெண் மீன்களை விட ஆண் மீன்கள் அளவில் பெரியவையாக வளர்கின்றன... thanks for watching

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

motivations quotes by apj abdul kalam