ஞாயிறு, 13 டிசம்பர், 2020

புதிய வேளாண்மை சட்டத்தை ஏன் இவ்வளவு எதிர்ப்பு?அதற்கான காரணம்?( Puthiya velan sattathai ethirka karanam)

ஏன், மோடி அரசின் 'புதிய வேளாண் சட்டங்கள் 2020'ஐ எதிர்த்து விவசாயிகளின் இந்த வரலாறு காணாத யுத்தம்? எதற்காக, 'உப்புப் போட்டு சோறு தின்னும்' ஒட்டுமொத்த தேசப் பற்றாளர்களின் இந்த எழுச்சிகரமான (டிசம்பர் 8) *பாரத்_பந்த்?*... * அந்த சட்டங்கள் யாருக்கானது என்பது மிகச் சுருக்கமாக... 1. *உற்பத்தி சார்ந்த சட்டம்* உற்பத்தி செய்யும் விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சாவுமணி... *நோக்கம்* : விவசாயிகள் தாங்கள் விளைய வைத்த பொருட்களை அடிமாட்டு விலைக்கு விற்கக்கூட கார்ப்பரேட்காரனை அண்டிப் பிழைக்கும் நிலையை ஏற்படுத்துவது! 2. *கொள்முதல் சார்ந்த சட்டம்* அரசே கொள்முதல் செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வாய்க்கரிசி... *நோக்கம்* : அம்பானிகளும் அதானிகளும் நிர்மானிக்கும் அதிநவீன கொள்முதல் கூடங்களில் விவசாயிகளை ஒப்பந்தம் போடவைத்து கார்ப்ரேட்காரனின் நவீன பண்ணையடிமைகளாக அவர்களை மாற்றுவது! 3. *விநியோகம் சார்ந்த சட்டம்* அத்தியாவசியப் பொருட்கள் (29) பாதுகாப்புச் சட்டத்திற்கு சங்கு... #நோக்கம் : சட்டவிரோத பதுக்கல் பேர்வழிகள் இனி சட்டபூர்வமாக பொதுமக்களின் வயிற்றில் அடிப்பது! ஆக, இது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனை. எனவே, இந்த அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்... நாளை இந்தியாவின் இயக்கத்தை நிறுத்துவோம்! #FarmersProtest #ModiAgainstFarmers #BharatBandh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

motivations quotes by apj abdul kalam