ஞாயிறு, 6 டிசம்பர், 2020

பெரியாரும் அவரின் சுயமரியாதையும்

*தமிழர்களின் தனிப்பெரும் தாய்நாடான நமது தமிழ்நாட்டின் தேசத் தந்தை - அறிவுலக ஆசான் அய்யா பெரியார், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரைக்குடிக்கு வந்திருந்தார். அப்போது, காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தான் எனும் ஊரில், அப் பகுதியில் அதிகார - ஆதிக்கச் சக்தியாக விளங்கும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனப்படும் நகரத்தார் குடும்பத்து திருமணம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்டக் குடும்பத்தினர் செய்துக் கொண்டிருந்தனர்.* *அப்போது திருமண நிகழ்ச்சிகளுக்காக அழைத்து வரப்பட்டிருந்த, நாதஸ்வரக் குழுவினர், தங்களது இசையைத் தொடங்கினார்கள். அப்போது, திருமண வீட்டாரைச் சேர்ந்த ஒருவர், நாதஸ்வரத்தை வாசிப்பவரிடம், " இந்தப் பகுதி, இங்கே பிரபலமான நகரத்தார் சமூகத்தின் செல்வாக்குப் பெற்றப் பகுதி. அதோடு மட்டுமல்லாமல், இந்தத் திருமணமும், நகரத்தார் வீட்டுத் திருமணம் ஆகும். மேலும், இந்தப் பகுதிகளில் நடக்கும் திருமணங்களில் நாதஸ்வரத்தை வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருமே, நாதஸ்வரத்தை வாசிக்கும்போது, தங்களின் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு வாசிப்பதுதான் காலங்காலமாய் இந்தப் பகுதியில் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நடைமுறை ஆகும். அதனால்......*: *அதனால், நீங்களும், உங்கள் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு, நாதஸ்வரத்தை வாசியுங்கள்" என்றார். அதற்கு நாதஸ்வரம் வாசிப்பவர் "இது என்னுடையத் தொழில். நாதஸ்வரத்தை வாசிக்கும்போது துண்டை தோளில் போட்டுக் கொண்டு வாசிப்பதுதான் இந்தத் தொழிலுக்கே உரியத் தனிச் சிறப்பு. - மரியாதை ஆகும். அதனால், துண்டை தோளில் போட்டுக் கொண்டுதான் வாசிப்பேன்" என்றார், நாதஸ்வரம் வாசிப்பவர். இந்தப் பிரச்சினை, தந்தைப் பெரியாரோடு, உடன் தங்கியிருந்த, அன்றையக் காலக்கட்டங்களில் தன்மானத்தோடு வாழ்ந்த உண்மையான சுயமரியாதைக்காரர்களில் ஒருவரான, பட்டுக்கோட்டை அழகிரியின் வழியாக தந்தைப் பெரியாரின் கவனத்துக்குக் கொண்டுப் போகப்பட்டது..... தமிழனின் சுயமரியாதைக்கு ஒரு பங்கம் - பாதிப்பு என்றால், தனக்கே உரியப் போர்க்குணத்தோடு பொங்கியெழும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.... "எக்கேடுக் கெட்டாலும் சரிதான்.... என்ன ஆனால

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

motivations quotes by apj abdul kalam