திங்கள், 14 டிசம்பர், 2020

பெரியாரும் செருப்பு தைக்கும் கவிஞரும் :-

பெரியாரும் செருப்பு தைப்பவரும் : ஒரு நாள் பெரியார் மாநாடுக்கு செல்லும்போது அவரது செருப்பு பிச்சுவிட்டது ,பெரியார் செருப்பை ஒரு பெரியார் தொண்டர் தைத்துவிட்டு வர சென்றார் ,அப்போது அருகே ஒரு கலியபெருமாள் என்ற செருப்பு தைப்பவர் இருந்தார் அவரிடம் பெரியார் தொண்டர் செருப்பை கொடுத்தார் இந்த செருப்பை தைத்து தாருங்கள் என்றார் ,கலியபெருமாள் அவரை பார்த்து நீங்கள் கருப்பு சட்டை அனிந்திருகிரீர்களே நீங்கள் பெரியார் தொண்டரா ? என்று கேட்டார், அதற்கு அவர் ஆம் நான் பெரியார் மாநாட்டிலிருந்து தான் வந்திருக்கிறேன் என்றார் , கலியபெருமாள் ஒரு கவிதையை பெரியாரின்டம் சொல்லவேண்டும் என்று ஆசைபட்டார், பெரியார் தொண்டர் அதை ஒரு காகிதத்தில் எழதிதாருங்கள் நான் அய்யாவிடம் அதனை கான்பிக்கிறேன் என்றார், கலியபெருமாள் எனக்கு எழுத படிக்க தெரியாது என்று சொன்னார். உடனே பெரியார் தொண்டர் இதை பெரியாரிடம் சொன்னார், உடனே பெரியார் கலியபெருமாளை அழைத்து வரும்படி தொண்டருக்கு சொன்னார், கலியபெருமாள் வந்தார் மேடையில் கலியபெருமாளின் கவிதை வாசித்தபிறகுதான் நமது உறை தொடங்குவோம் என்று பெரியார் அறிவித்தார்...அதற்கு அவர் அய்யா எனக்கு படிக்க தெரியாது என்றார் ,பரவா இல்லை இது உங்களுடைய கவிதைதானே பேப்பரை வைத்துகொண்டு கவிதையை வாசியுங்கள் என்றார் ,மாநாடு தொடங்கியது கலியபெருமாள் மேடையில் தனது கவிதையை சொன்னார்.,மக்கள் பாராட்டு பெற்றார், பெரியாரின் அடுத்த மாநாடுகளில் கலியபெருமாள் கவிதை வாசித்தபிறகுதான் தனது பேச்சை தொடங்குவார் போஸ்டர் விளம்பரங்களில் கலியபெருமாளின் கவிதை வாசிப்பும் இருக்கும் என்றுதான் மாநாடு விளம்பரம் செய்வார்...உடனே இதை விரும்பாத பார்பனர்கள் ஒரு படிக்காத பட்டம் பெறாத ஒருவரை நீங்கள் எப்படி கவிஞர் என்று சொல்லாம்  இனி அவரது கவிதை வாசிக்க கூடாது என்று நீதி மன்றத்தில் பெரியார் மீது வழக்கு போடப்பட்டது., அதற்கு பெரியார் எந்த வழக்கறிஞர்களும் இல்லாமள் அவரே வழக்கை சந்தித்தார் ,பெரியார் கோர்ட்டில் இவ்வாறு கூறினார், கவிதை சொல்வதற்கு கல்வி தகுதி வேண்டும் என்றால் ,கம்பர் வால்மீகி எல்லாரும் எந்த பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்கள் சொல்லுங்கள் என்றார் ,அங்கே யாருஇடத்திலும்  பதில் இல்லை, நீதிபதி வழக்கை நிராகரித்துவிட்டார் பெரியாருக்கு எந்த தண்டனையும் பெறாமல் வெளியே வந்தார் .... அன்று முதல் இன்று வரை பெரியார் என்றாலே பார்ப்பனர்களை பதற வைத்தவர்தான் பெரியார்... எத்தனை நூற்றாண்டு ஆனாலும் அடக்குமுறை என்றால் அங்கே பெரியார் நினைவு கூறபடுகிறார்.... Sent from my Samsung Galaxy smartphone.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

motivations quotes by apj abdul kalam