புதன், 10 பிப்ரவரி, 2021

கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் stephen hawking books - there is no gods this is say for scientist stephen hawking

the stephen hawking. நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்தப் பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் என்று கூறியவர் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். 1942-ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்துள்ளார். “கடவுள் என்று யாரும் இல்லை”- தன் இறுதி புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் There-is-no-God---says-Stephen-Hawking-in-final-book 'கடவுள் என்று யாரும் இல்லை' என தனது கடைசி புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்தப் பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் என்று கூறியவர் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். 1942-ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்துள்ளார். தனது இளம்வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானார். பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு. தனது 76வது வயதில் கடந்த மார்ச் மாதம் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். இந்நிலையில் இறப்பதற்கு முன்பு இவர் தொகுத்த பல தகவல்கலை திரட்டி Brief Answers to the Big Questions என்ற புத்தகத்தை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி புத்தகம் என்று சொல்லப்படும் இதில் ஏலியன், வான்வெளி, சோலார் சிஸ்டம் உள்ளிட்ட பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன கடவுள் குறித்து தகவல் தெரிவித்துள்ள ஸ்டீபன் ஹாக்கிங், ''கடவுள் என்பவர் இல்லவே இல்லை. இந்த உலகத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. பிரபஞ்சத்தை யாரும் இயக்கவும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார். கடவுள் குறித்து ஸ்டீபன் பேசுவது இது முதல் முறை அல்ல. பல கூட்டங்களில் கடவுள் குறித்த கேள்விகளுக்கு ‘கடவுள் இல்லை’ என்பதையே அவர் பதிலாக கொடுத்துள்ளார். 2015ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கடவுள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ''கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. மதங்கள் கூறும் கடவுளின் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவை'' என்று தெரிவித்தார். இவரின் இந்தக் கருத்துக்கு மத அமைப்புகள் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

motivations quotes by apj abdul kalam