திங்கள், 1 மார்ச், 2021

அறிஞர் அண்ணா -பிறப்பு மற்றும் இந்தி எதிர்ப்பு கட்டுரை

Born: 15 September 1909, Kanchipuram
Spouse: Rani Annadurai (m. 1930–1969)
Books: Anna (C.N. Annadurai): Reader
Previous offices: Chief Minister of Tamil Nadu (1969–1969), MORE
Children: Ilangovan, C.N.A. Parimalam, Gouthaman
Died: 3 February 1969, Chennai 1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் முதன்மைக் கட்டுரை:
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது[32]. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை: “ இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?, உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே[34] ” “ தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது. இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது. மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது. ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

motivations quotes by apj abdul kalam