புதன், 24 பிப்ரவரி, 2021

இந்தியா 2020 |a.p.j.அப்துல் காலம் எழுதிய நூல் in tamil | INDIA -2020 | A.P.J.ABDULKALAM IN BOOKS LINES IN | TAMIL -THE EMPIRE STATE OF INDIA -2020

நாட்டில் உள்ள 25 வயதுக்குட்பட்ட 54 கோடி பேரையும் ஊக்கப்படுத்தி உத்வேகத்துடன் அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும்.
அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்.
அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்.
இளைஞர்கள்தான் இந்த உலகின் மாபெரும் சக்தி. வளர்ந்த, வல்லரசு இந்தியாவில் நகர்ப்புற, கிராமப்புற வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும்.
மின்சாரமும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்கும்.
விவசாயம், தொழில்துறை, சேவைத் துறை இணைந்து செயல்படும்.
கல்விக்கு சிறந்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வாழ்க்கைக்குத் தேவையான கல்வி கற்பிக்க வசதி கிடைக்கும்.
கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகளுக்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்கும்.
உலகிலேயே சிறந்த மருத்துவ வசதிகள் வளர்ந்த இந்தியாவில் அபரிமிதமாக இருக்கும்.
அரசு நிர்வாகம் பொறுப்பானதாக, வெளிப்படையானதாக, ஊழலற்றதாக இருக்கும்.
வறுமை அறவே ஒழிந்திருக்கும்.
கல்லாமை இல்லை என்ற நிலையில் இருக்கும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அறவே இல்லாதிருக்கும்.
சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
புறக்கணிப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
இப்படிப்பட்ட ஒரு வளர்ந்த, வல்லரசு நாடாக இந்தியா நிச்சயம் மாறும்.
மிகச் சிறந்த திறமை வாய்ந்த அரசு நிர்வாகம் உள்ள நாடாக, அமைதியான நாடாக, அனைவரும் வசிக்க ஆசைப்படும் அழகிய நாடாக நமது இந்தியா நிச்சயம் மாறும்.
நமது நாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சி வர வேண்டும்.
தங்களது வளமான நிலங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், சக்தியும் கொடுக்க வேண்டும்.
விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போக அனுமதிக்கக் கூடாது.
விவசாயிகளும், விவசாய விஞ்ஞானிகளும், தொழிற்சாலைகளும் இணைந்து சீரிய முறையில் உழைத்தால், நமது விவசாய பொருளாதார வளர்ச்சியை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரிக்க முடியும் என்றார் கலாம்.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் -IN BIOGRAPHY 1931-2015

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்: அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை: தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்: 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்: 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
மரணம்:
அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.
அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

கொசுக்களை விரட்டும் தாவரம் துளசி உங்களுக்கு தெரியுமா?

கொசுவிரட்டியாக பயன்படும் தாவாரம் :-
துளசி செடி சளி ,இருமலுக்கு நல்ல தருந்தாக பயன்படுகின்றது ,இது பெரும்பாலானோர் தெறிந்த ஒன்று ,ஆனால் துளசி செடி இருக்கும் இடத்தில் கொசு அன்டாது ,இது உங்களுக்கு தெரியுமா? ஆம் துளசி செடியின் வாசம் கொசுக்களுக்கு பிடிக்காது,துளசி செடி இருக்கும் இடத்தில் கொசு வரவே வராது ,எனவே உங்கள் வீட்டில் துளசி செடி வளர்த்து அதனை அழகிற்கும் ,மருத்துவத்திற்கும் மற்றும் கொசு விரட்டியாக பயன்படுத்துங்கள் . FOLLOW THIS PAGE

சனி, 20 பிப்ரவரி, 2021

மார்க்ஸின் இறுதி அஞ்சலியில் அவரது உயிர் நண்பர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் கலந்து கொண்டு பேசியது !" - KARL MARX -WE MEDIA TAMILNADU

KARL MARX -(1818 MAY 5 -1883 MARCH 1)
, அவரது உயிர் நண்பர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ்;- மார்ச் 14-ஆம் தேதி மாலை மூன்று மணியாவதற்கு 15 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்தி விட்டார். இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப் பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது சாய்வு நாற்காலியில் மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டதைக் கண்டோம்." என்றார். பாட்டாளிகளை அவர் அன்புடன் 'காம்ரேட்ஸ்' அதாவது 'தோழர்களே' என்றுதான் அழைத்தார். இன்றும்கூட தொழிற்சங்கங்களில் அந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவுடமைக் கொள்கையில் அடிப்படையில் எந்த பிரச்சினையும் கிடையாது. கம்யூனிசத்தின் இன்றைய அழிவிற்கு அது நடைமுறைப் படுத்தப்பட்ட விதம்தான் காரணமே தவிர, அதன் அடிப்படை நோக்கங்கள் அல்ல. அந்த நோக்கங்கள் உயரியவை. மார்க்ஸ் நினைத்தது போலவே அது செயல்படுத்தப் பட்டிருந்தால் அதைவிட ஒரு நியாயமான பொருளியல் சித்தாந்தம் இருக்குமா என்பது சந்தேகமே. உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் 'சமதர்மகொள்கை' என்ற தன் இலக்கிலிருந்து மாறவே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன். அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான். ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸுக்குதான் நன்றி சொல்கிறது வரலாறு. மார்க்ஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்...துன்பமும், துயரமும் போட்டிப் போட்டுக்கொண்டு நம்மை தாக்கினாலும், நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும், நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும். "உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை- அடிமைத்தனத்தை தவிர! ஆனால் வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது!" "நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது! -கார்ல் மார்க்ஸ்

KARNAN MOVIE IN SONGS LYRICS IN TAMIL LINES -WE MEDIA TAMILNADU

KANDAA VARA SOLLUNGA SONG LYRICS LINE ;-
SOORIYAANUM THOTTATHILLEH SANTHIRANUM SAATCHIYILLA... SOORIYANUM PEKKAVILLA SANTHIRANUM SATCHIYILLA... PATHAKATHI PETHA PULLA PANJAM THINNU VALANTHA PULLA... KANDAA VARA SOLLUNGA KARNANA KAIYODA KOOTTIVAARUNGA AVANA .. KANDA VARA SOLLUNGA KARNANA KAIYODU KOOTTIVAARUNGA... KANDAA VARA SOLLUNGA KAIYODA KOOTTIVAARUNGA.. AMMAADI AALAMARAM MARATHU MELA UTCHIKILA... (REPEATED) AMMAADI AALAMARAM MARATHU MELA UTCHIKILA... OTHAKILI NINNA KOODA KATHUM PAARU AVAN PERA.... KANDAA VARA SOLLUNGA KARNANA KAIYODA KOOTTIVAARUNGA AVANA .. KANDA VARA SOLLUNGA KARNANA KAIYODU KOOTTIVAARUNGA... KANDAA VARA SOLLUNGA KAIYODA KOOTTIVAARUNGA.. (REPEATED) KANDAA VARA SOLLUNGA KAIYODA KOOTTIVAARUNGA.. OORELLAM KOVILAPPAA KOVILELLAM SAMIYAPPAA... (REPEATED) OORELLAM KOVILAPPAA KOVILELLAM SAMIYAPPAA.. OTHA POODAMKOODA ILLAYAPPA YENGA KUDUMPATHULA ORUTHANAPPAA... KANDAA VARA SOLLUNGA KARNANA KAIYODA KOOTTIVAARUNGA AVANA .. KANDA VARA SOLLUNGA KARNANA KAIYODU KOOTTIVAARUNGA... (YARUUUUUUUUUU)WITH KANDAA VARA SOLLUNGA KAIYODA KOOTTIVAARUNGA. KAVASATHAYUM KANDATHILLE YENTHA KUNDALAMUM KOODAYILLA... VAAL THOOKKI NINNAN PAARU VANTHU SANDAPOTTA YEVANUMILLAI... VAAL THOOKKI NINNAN PAARU VANTHU SANDAPOTTA YEVANUMILLAI... KANDA VARA SOLLUNGA KARNANA KAIYODU KOOTTIVAARUNGA... (REPEATED) AVANA .. KANDA VARA SOLLUNGA KARNANA KAIYODU KOOTTIVAARUNGA... KANDAA VARA SOLLUNGA KAIYODA KOOTTIVAARUNGA. (YEAHHHHHHH)WITH KANDAA VARA SOLLUNGA KAIYODA KOOTTIVAARUNGA. KANDAA VARA SOLLUNGA KAIYODA KOOTTIVAARUNGA.

புரட்சியாளர் லெனின் வாழ்க்கை வரலாறு -THE LEGEND LENIN -BIOPRAPHY (Vladimir Ilyich Ulyanov)-IN TAMIL WE MEDIA TAMILNADU

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் வரலாறு இதுவரை சந்தித்திருக்கும் மிகப் பெரிய புரட்சிகளுள் ஒன்று அதன் உச்சகட்டத்தை தொட்ட தினம் அன்று. நாட்டில் தலை விரித்தாடிய பசிக்கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியம் ஒரு வரலாற்று நாயகரின் நெஞ்சத்திலும், வயிற்றிலும் தீயாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் அந்த தீ விஸ்வரூபம் எடுத்து நாட்டின் இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து ஒரு புதிய ஆட்சியை அமைக்க உதவியது. 'நவம்பர் புரட்சி' என்று வரலாறு அழைக்கும் அந்த புரட்சியை சந்தித்த நாடு ரஷ்யா. "இந்த நாட்டிற்க்கு இப்போதைய தேவை யுத்தம் இல்லை, அமைதியும், உணவும், வேலையும்தான். உலகப் போரிலிருந்து ரஷ்யா உடனடியாக விலக வேண்டும். பசித்த வயிற்றுடன் நம் இராணுவத்தினர் இனிமேல் வீம்புக்காக போர் முனைகளில் சாகக்கூடாது. மக்களுக்கு அமைதி, உண்ண உணவு, விவசாயம் செய்ய நிலம், இந்த மூன்றுதான் இந்த நாட்டின் இப்போதைய தேவை".
என்ற ஆவேசமான பிரச்சாரத்துடன் தன் நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி அந்த நவம்பர் புரட்சிக்கு வித்திட்டு ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர வழி வகுத்த அந்த வரலாற்று நாயகர் லெனின். கம்யூனிச சித்தாந்தம் கார்ல் மார்க்ஸின் சிந்தனையில் உதித்த ஒன்று என்றாலும் அந்த சித்தாந்தத்தை வரலாற்றில் முதன் முதலில் செயல்படுத்தி காட்டிய புரட்சி வீரர் லெனின்தான்.
1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் ரஷ்யாவின் வால்கா (Volga River) நதிக்கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் (Simbirsk) எனும் நகரத்தில் பிறந்தார் விளாடிமிர் இலீச் உல்யானவ் (Vladimir Ilyich Ulyanov) என்ற லெனின். அந்த நகரம் இப்போது லெனினின் நினைவாக உல்யானவ்ஸ் (Ulyanov's) என்று அழைக்கப்படுகிறது. லெனினுக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர். அவரது தந்தை நம்பிக்கைக்குரிய அரசாங்க அதிகாரியாக இருந்தாலும், லெனினின் மூத்த சகோதரர் அலெக்ஸாண்டர் முற்போக்கு கொள்கையும், தீவிரவாத கொள்கையும் உடையவராக இருந்தார். அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஷா மன்னன் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாதவனாக இருந்தான்.
மன்னனைக் கொல்வதே ரஷ்ய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க ஒரே வழி என்று நம்பிய அலெக்ஸாண்டர் அதற்காகத் திட்டமிடத் தொடங்கினார். அந்தத் திட்டத்தை அறிந்த மன்னனின் அதிகாரிகள் அலெக்ஸாண்டரையும், அவரது நண்பர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி 1887-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் அவர்களை தூக்கிலிட்டுக் கொன்றனர். அப்போது லெனினுக்கு வயது பதினேழுதான். சிறு வயதிலிருந்தே தன் அண்ணனோடு நெருங்கிப் பழகியவர் லெனின். பெற்றோர் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். ஆனால் அலெக்ஸாண்டருக்கும், லெனினுக்கும் மதப்பற்று இருந்ததில்லை. குடும்பம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயம் செல்லும்போது அவர்கள் இருவர் மட்டும் ஆலயம் செல்ல மறுத்தனர். பிள்ளைகளின் சுதந்திரத்தில் பெற்றோர் தலையிட விரும்பாததால் குழந்தைப் பருவத்திலிருந்தே புதுமைக் கருத்துகளோடும், சுயமாக சிந்தித்து செயல்பட்டு முடிவெடுக்கும் வாய்ப்போடும் வளர்ந்தார் லெனின்.
விளையாட்டிலும், படிப்பிலும் பள்ளியில் முதல் மாணவனாக திகழ்ந்த அவர் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். அண்ணனின் மரணம் அவரை பெரிதாக பாதித்தாலும் தன் நாட்டுக்கு புதிய ஆட்சி தேவை என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றி வளரத் தொடங்கியது. கஸான் நகரில் உள்ள (Kazan University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பயின்றார் லெனின். ஒரு தீவிரவாதியின் தம்பி என்று கூறி முதலில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தது பல்கலைக்கழகம். ஆனால் அவரது கல்வி தேர்ச்சியைக் கண்டு பின்பு மனம் மாறி ஏற்றுக்கொண்டது. பல்கலைக்கழகத்தில் தன்னுடம் படித்த முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் லெனினை பல்கலைக்கழகம் வெளியேற்றியது. ஆனால் வைராக்கியத்துடன் சுயமாகவே படித்து 1891- ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்றார் லெனின்.
அந்தக் காலகட்டத்தில் தான் கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற 'மூலதனம்' என்ற நூலை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் கருத்துகளை அவர் பரப்பத் தொடங்கினார். அதனை அறிந்த ஷா மன்னன் லெனினை கைது செய்து மூன்று ஆண்டு சிறை தண்டனையுடன் ஷைபீரியாவுக்கு நாடு கடத்தினான். தண்டனை முடிந்ததும் 1900-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்ற லெனின் அங்கிருந்து ஒரு பத்திரிக்கை நடத்தத் தொடங்கினார். அடுத்த பதினேழு ஆண்டுகள் அவர் ஐரோப்பாவிலேயே தங்கியிருந்து ஷா மன்னனின் கொடுங்கோன்மை பற்றியும், ரஷ்ய தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நிறைய எழுதினார். லெனினின் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.
ஷா மன்னனின் ஆட்சியில் நிலக்கரி தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஒரு ரொட்டித் துண்டுக்காக மக்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொல்லும் அளவுக்கு உணவு பஞ்சம் கோர தாண்டவம் ஆடியது. மன்னன் தன் மனைவி அலெக்ஸாண்ட்ராவின் கைப்பாவையாக விளங்கினான். மனைவியோ ரஷ்புட்டின் என்ற காமுக சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்தாள். மன்னனும், ராணியும் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் இருந்ததால்தான் மன்னனைக் கொல்ல திட்டம் தீட்டினார் லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர். தங்கள் பிரச்சினைகளை சொல்ல அரண்மனை நோக்கி ஊர்வலமாக சென்ற அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். பொறுத்தது போதும் என்று ஒரு தேசமே பொங்கி எழுந்தது.
1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீதிகளில் திரண்ட ரஷ்ய மக்கள் மன்னனுக்கு எதிராக எழுப்பிய கோஷங்களால் ரஷ்யாவே அதிர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிதவாத சோசியலிஸ்ட் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றியது. பெரும் கோபத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஷா மன்னனையும், அவனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர். ஆனால் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களாலும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லை. ஷா மன்னன் மறைந்தாலும் நாட்டின் அவலங்கள் மறையவில்லை. அதுதான் சரியான தருணம் என்று நம்பிய லெனின் தன் தாய்நாடு நோக்கி புறப்பட்டார். அவருடைய சகாக்கள் உருவாக்கியிருந்த செஞ்சேனியைக் கொண்டு அதே ஆண்டு அதாவது 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை (Petrograd) சுற்றி வளைத்தது லெனினின் படைகள்.
இடைக்கால ஆட்சியின் வீரர்கள் துப்பாக்கிகளை கீழே போட்டு விலகி நிற்க, ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல், வன்முறை நிகழாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் லெனின். ரஷ்யாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்தது. பிரச்சாரத்தில் கூறியிருந்ததைப் போலவே ஆட்சிக்கு வந்த மறுநாளே நில பிரபுக்களின் விளை நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார் லெனின். தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. லெனின் ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்த பிறகுதான் பெரும்பாலான நாடுகளில் கம்யூனிசம் பரவத் தொடங்கியது. கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவர் பின்பற்றினாலும் அடக்கு முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார்.
நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. தனது புரட்சிகரமான கருத்துகளை அவர் புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. 1922-ஆம் ஆண்டு மே மாதம் லெனினை முடக்குவாதம் தாக்கியது. உடல் செயலிழந்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் தனது 54-ஆவது வயதில் அவர் காலமானார். அவரது பதப்படுத்தபட்ட உடல் இன்றும் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அடக்கு முறையையும், முறையற்ற ஆட்சியும் நடந்தபோது நம்மால் என்ன செய்ய முடியும்? என்று மற்றவர்களைப்போல் லெனினும் ஒதுங்கியிருந்திருந்தால் அவரால் வரலாற்றில் அவ்வுளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது.
கம்யூனிசம் கொள்கைகளின் நிறை, குறைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், எல்லொருக்கும் வேலை கிடைக்க வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றும் சிந்தித்ததாலேயே வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றிருக்கிறார் லெனின். அவரைப் பற்றியும், ரஷ்ய புரட்சியைப் பற்றியும் வருணிக்க முனைந்த மகாகவி பாரதியார்....
மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே, ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி, கொடுங்காலன் அலறி வீழ்ந்தான், வாகான தோள்புடைத்தார் வானமரர், பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர் போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம், வையகத்தீர், புதுமை காணீர்!
என்று கவிதை வடித்திருக்கிறார். நம்மால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற அசைக்க முடியா நம்பிக்கையும், தன் இலக்கை நோக்கி இரவு, பகல் பாராமல் உழைக்கும் மனஉறுதியும், எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும்தான் லெனின் என்ற அந்த வரலாற்று நாயகனுக்கு வானத்தை வசப்படுத்த உதவிய பண்புகள். அதே பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் லெனினைப் போல் ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியாவிட்டாலும், குறைந்தது நம் தலையெழுத்தையாவது மாற்றிக் கொள்ளலாம். நாம் விரும்பும் எந்த வானத்தையும் வசப்படுத்திக் கொள்ளலாம்.




வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

சிவலிங்கம் உருவான கதை தெரியுமா? How produce the Hindu god shivalingam ?

சிவலிங்கம் உருவான கதை தெரியுமா?? நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்ம புராணம் கூறுகிறது கேளுங்கள்..! பத்ம புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17 இல், பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் (அவர்கள் கணவர்கள்) மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதுதான் சிவலிங்கம். இதைதான் சில காட்டுமிராண்டிகள் வணங்குகின்றார்கள்.

புதன், 17 பிப்ரவரி, 2021

tamilnadu in state ,animal,state frute ,state tree ,state birds,state flower ,state butterfly -tamizhaa tamizhaa media

State Anima Nilgiri tahr State Bird Emerald dove State Flower Glorosa lily State Tree Palm tree State Butterfly Tamil yeoman State Fruit Jackfruit

மீன்களால் பறக்கமுடியுமா ? (The flying fish)

மீன்களால் பறக்க முடியுமா ? மீன்களால் பறக்கமுடிமா ? என்ற கேள்விக்கு பதில் முடியும். ஆனால் அனைத்து மீன்களும் அல்ல flying fish என்று சொல்லக்கூடிய அதாவது பறக்கும் ஒரு வகை மீன்களால் முடியும் ,இந்த வகை மீன்களால் ஒரு சிரிய குறிப்பிட்ட தண்ணீர்க்கும் இடையே பறக்க இயலும் ,இவைகளுக்கு துடுப்பானது exocoetidae சற்று இறக்கைபோல் மாறி இருக்கின்றது, இதனால் இதைவைத்து இவைகளால் பறக்க இயலும் ,கடலில் உள்ள பெரிய மீன்களிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள அவை exocoetidae என்ற வகை துடுப்பை இறக்கையாக பயன்படுத்தி பறக்கின்றது.ஆனால் இவைகள் பறக்கின்றபொழுது பறவைகளுக்கு இறையாகின்றது,இதற்கு பலமாக அமைந்தவை பலவீனமாக மாறிவிடுகின்றது .இந்த வகை மீன்கள் பெரும்பான்மையாக அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலில் வாழ்கின்றன.
please comments and sharing this post...

சனி, 13 பிப்ரவரி, 2021

the oscar award winners list of all indian's-we media tamilnadu.இந்தியாவில் ஆஸ்கர் விருதை வாங்கியவர்கள் பட்டியல் மற்றும் விவரம்

1. Bhanu Athaiya The 1st Oscar award winner in India was Bhanu Athaiya who won the award for the Best Costume Design for the film ‘Gandhi’. Bhanu Athaiya was part of the 1983 film which went on to win five other Oscars, including the Best Film award and the Best Actor award.
2. Satyajit Ray The acclaimed director from West Bengal was given an honorary Oscar for his contribution to cinema in 1992. Some of his most poignant and important works include Pather Panchali, Aparajito, and The World of Apu which forms a trilogy following the story of Apu.
3.Resul Pookutty won the Oscar for the Best Sound Mixing for Slumdog Millionaire. The movie, helmed by acclaimed Hollywood director, Danny Boyle, told the story of a poor slum residing boy in India who goes on to win a million rupees.
4.A.R Rahman and Gulzar A.R Rahman and Gulzar won the award for Best Original Song for Jai Ho in the movie Slumdog Millionaire. When accepting the award, the musical genius, A.R Rahman dedicated the award to all Indians. The song became the anthem of the country and is still one of the most recognized songs from India. 5. A.R Rahman He also won the award for the Best Original Score for Slumdog Millionaire. Rahman was later nominated twice again for the movie 127 Hours in 2011. the two oscar award winner the first and last indian 'AR.RAHMAN ONLY.
இந்தியா மொத்தம் ஐந்து ஆஸ்கர் வென்றது ,அதில் 2 விருதை வாங்கிய முதல் இந்திரும் கடைசி இந்திரும் இவரே... ஏ.ஆர்.ரஹ்மான்

motivations quotes by apj abdul kalam